மத்திய அரசு பணியாளர்கள் ஜன.8ம் தேதி ஸ்டிரைக்

கோவை, டிச. 12: அகில இந்திய மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் வரும் ஜனவரி 8ம் தேதி நடக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் அளிக்க வேண்டும். ரயில்வே, தபால், பாதுகாப்பு துறைகளை தனியார் மயமாக்கலை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் குட்டி, பொது செயலாளர் கிருஷ்ணன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நடத்துவது தொடர்பாக ஒப்புதல் பெற கேபினேட் செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: