×

தேர்தல் விதிமுறை குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

கோவை,டிச.12:  உள்ளாட்சித் தேர்தலில் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை கலெக்டர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களுக்கும் வருகிற 27 மற்றும்  30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகின்றன. இதில் தேர்ல் விதிமுறை மீறல்கள் தொடர்பான புகார்களை தேர்தல் பிரிவு அதிகாரிகளிக்கு தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திறக்கப்பட்டது. 1800-599-6000 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது 0422-2301586 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் துணை வட்டார வளர்ச்சி நிலையில் அலுவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் தெரிவிக்கும் தேர்தல் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டு உடனடியாக தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் வேண்டுகோள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்