×

குன்னூர் பாரஸ்ட்டேல் பகுதியில் பகல் நேரத்தில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம்

குன்னூர்,டிச.12:   குன்னூர் அருகே உள்ள பாரட்ஸ் டேல், பாரத நகர், ஜிம்கானா, ஸ்டாப் காலேஜ்  ஆகிய பகுதியை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அவ்வப்போது இந்த வனத்தை விட்டு வெளியேறும் காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதி அருகே உலா வந்து பொதுமக்களை அச்சறுத்தி வந்தன. இதில் கடந்த சில நாட்களுக்கு முன் சாலையோரங்களில் உள்ள வனப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை சாலையை கடந்து சென்றதை கண்டுவாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நேற்று  பாரஸ்ட் டேல் வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தையை கண்டு வாகனத்தை  நிறுத்தியுள்ளனர். மேலும், சிறுத்தையை புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இது  குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அந்த  பகுதி வனத்துறையினருக்கு சொந்தமான காப்புகாடு என்பதால் வன விலங்குகள்  குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் இருக்க தற்போது கண்காணிப்பு பணிகளை  தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags : Motorists ,daytime ,Coonoor ,Barstdale ,
× RELATED வெளியே நடமாட முடியவில்லை தூசி நகரமாக...