நீலகிரி மலைகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

ஊட்டி,  டிச.12: புகழ்பெற்ற நீலகிரி மலைகளின் சிறப்புகள் குறித்து சுற்றுலா  பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான மலைகள் உள்ளன.  2637 மீட்டா் உயரமுள்ள தொட்டபெட்டா மலைச்சிகரம், கொலரிபெட்டா மலை,  முக்குருத்தி மலை, நீலகிரி மலை, ரங்கசாமி பீக், நீடில்ராக் போன்றவை  குறிப்பிட்டு சொல்ல கூடிய மலைகளாக விளங்கி வருகிறது.  நீலகிரியில் உள்ள மலைதொடா–்களுக்கு நடுவே பவானி, குந்தா மற்றும் மாயாா் ஆகிய ஆறுகள் உற்பத்தியாகின்றன. இங்கு  உற்பத்தியாகும் ஆறுகளுக்கு நடுவே அணைகள் கட்டி நீர் மின் உற்பத்தி  செய்வதன் மூலம் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நீலகிரியின்  பிரதான தொழிலாக தேயிலை விளங்கி வருகிறது. மேலும் கடந்த 200 ஆண்டுகளாக மலை  காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. நீலகிரிக்கு ஆண்டுக்கு சுமாா் 30  லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமீபகாலமாக அதிகரித்து  வரக்கூடிய கட்டுமானங்கள் நீலகிரியில் உள்ள மலைகளின் அழகிற்கு அச்சுறுத்தலாக  உள்ளது. பல்வேறு மலைத்தொடர்களை தன்னகத்தே கொண்டு, மேற்கு தொடர்ச்சி மலைகளில்  ஒன்றாக அமைந்து பரந்து விரிந்து மலைகளின் அரசியாக திகழும் நீலகிாியில் உலக  மலைகள் தினத்தையொட்டி மலைகளை பாதுகாக்கும் பொருட்டும், அவற்றின்  சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் உாிய நடவடிக்கைகள்  எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
 
இது குறித்து ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் கூறுகையில்,தமிழ்நாட்டில்  உள்ள முக்கிய மலைவாச ஸ்தங்களில் ஒன்றாக நீலகிாி உள்ளது. பல்லுயிர்  பெருக்கத்திற்கும் முக்கிய பங்காற்றி வருகிறதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  தொிவிக்கின்றனர். நீலகிாியில் உள்ள மலைகளில் சிறப்பு வாய்ந்த மலைகளாக  தொட்டபெட்டா மலைச்சிகரம், முக்கூருத்தி மலை உள்ளிட்ட பல்வேறு மலைகள் உள்ளன. இங்குள்ள மலை தொடர்களில் இருந்து முக்கிய ஆறுகள் உற்பத்தியாகின்றன ஆற்று  நீைர கொண்டு நீர் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. நீலகிாியில்  உற்பத்தியாகும் தண்ணீரை கொண்டு மூன்று மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 47  ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 2003ம் ஆண்டு  யுனஸ்கோ டிசம்பர் 11ம் தேதியை சர்வதேச மலை தினமாக அறிவித்தது. ஆனால் இதுவரை  நீலகிரியில் உலக மலை தினம் கொண்டாடப்படாமல் உள்ளது துரதிஷ்டவசமானது. எனவே  இனிவரும் ஆண்டுகளிலாவது மலை தினம் கொண்டாடப்பட வேண்டும், என்றார்.


Tags : Nilgiris ,
× RELATED இரண்டாம் சீசன் முடிந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை