×

கந்தர்வகோட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம்

கந்தர்வகோட்டை, டிச.12: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மகாலில் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்திற்கு சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசுகையில், நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நமக்குள் போட்டி போடாமல் நமக்குள்ளேயே ஒருவரை தேர்ந்தெடுத்து தேர்தலை சந்திந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என ஆலோசனை வழங்கினார். தேர்தலில் போட்டியிட முடியாதவர்கள் போட்டியிடுபவர்கள் வெற்றி பெற உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், வீட்டு வசதிவாரிய தலைவருமான வைரமுத்து, கந்தர்வகோட்டை எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்லத்துரை, ராமசாமி, ராமையா, கணேசன், கந்தர்வகோட்டை ஒன்றியச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட மாணவரணி பாண்டியன், மாவட்ட பாசறை இணைச்செயலாளர் அருண்பிரசாத், முத்துக்குமார், இளங்கோவன், ஆனந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Advisory Meeting ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...