×

பள்ளி மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டை

பந்தலூர், டிச.12: கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பந்தலூர் கிளை நூலகம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகிவை சார்பில் கல்வி விழிப்புணர்வு மற்றும் நூலக அட்டை வழங்கும் நிகழ்ச்சி பந்தலூர் புனித சேவியார் ஆரம்பப்பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் செலின் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, நூலகர் அறிவழகன், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌஷாத், கோவை கிராமிய சங்கேந்திரா அமைப்பு செயலாளர் வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,  நூலகம் பல்வேறு நூல்களைப் படிப்பதற்கு உதவியாக அமைந்துள்ளது. நூல்களைப் படிக்கும்போது மாணவர்களுக்கு நல்லெண்ணங்கள் அதிகரிப்பதனால் குற்றங்கள் குறைந்து காணப்படும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்தவேண்டும். பொது அறிவு வளர்த்துக்கொள்ள செய்தித்தாள் வாசிப்பதை கடைபிடிக்க வேண்டும்.

இதன் மூலம் போட்டித் தேர்வுகளில் வேலைவாய்ப்புகளில் நேர்முக தேர்வுகளில் வெற்றிப்பெற உதவும் என்றார்.அதைதொடர்ந்து கிராமிர் சங்கேந்திரா அமைப்பின் தலைவர் கமலேஷ் பேசுகையில், மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்க வேண்டும். மீண்டும் மீண்டும் படிக்கும்போது நிறைய தகவல்களை பெற முடியும். படிப்போடு விளையாட்டு போன்றவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மைதானங்களில் நேரங்களை செலவிடும்போது உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. ஆரோக்கியம் கல்வி இரண்டும் வாழ்க்கையை உயர்த்த உதவும் இவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார்.இதில் மாணவர்கள் 100 பேருக்கு நூலக அடையாள அட்டை வழங்கப்பட்டது.கிராமிய சங்கேந்திரா சார்பாக போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் நூலகத்திற்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்  பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : school children ,
× RELATED கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்