×

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை கந்தர்வகோட்டையில் பஸ்சின் படிக்கட்டில் பயணித்த மாணவன் கால் விரல் நசுங்கியது

கந்தர்வகோட்டை, டிச.12: கந்தர்வகோட்டையில் அரசு டவுன் பஸ்சில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் கால் விரல் நசுங்கியது. சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளான். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து பள்ளி வரும் நேரத்திலும் மற்றும் பள்ளி விட்டு வீட்டுக்கு செல்லும் நேரத்தில் அரசு டவுன் பஸ்கள் குறைவாக இயக்கப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகள் அதிகமாக முண்டியடித்து செல்லும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இரண்டு தினத்திற்கு முன்பாக பள்ளி முடித்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படிக்கும் மாணவன் ஐயப்பன் (17) நெப்புகைக்கு கறம்பகுடி செல்லும் அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வளைவில் பஸ் சென்றபோது கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ் படிகட்டில் பயணம் செய்த ஐயப்பன் கால் விரல் சாலையில் மோதி நசுங்கியது. உடனடியாக அவனை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் ஏற்கனவே ஒரு மாணவனின் கால் நசுங்கியது குறிப்பிடத்தக்கது. பள்ளி வரும் நேரம் மற்றும் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கைகள் மட்டும் இருந்து வருகிறது. அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : activists ,student ,Kandarwakota Fort ,
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...