×

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, டிச. 12: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கல்லூரியின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல அமைப்புகள் குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கோவை அரசு கலைக்கல்லூரியின் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஏற்க மாட்டோம் என வலியுறுத்தி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. இந்த நாட்டில் மதத்தின் பெயரில் குடியுரிமை அளிப்பதை ஏற்க முடியாது. இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்போம். இந்திய நாட்டை மத அடிப்படையில் பிரிவினை செய்ய அனுமதிக்க மாட்ேடாம். தமிழருக்கும், இஸ்லாமியருக்கும், இந்திய மக்களுக்கும் எதிராக உள்ள குடியுரிமை சட்டத்தை ஏற்கமாட்டோம் என வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை தடுக்க கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் கோரிக்கை வைத்தனர். கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மாணவர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

Tags : protest ,Government of Goa ,
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...