×

அவிநாசியில் ரூ.25.85 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, டிச. 12:   அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ.25.85 லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.   இந்த வாரம் ஏலத்தில் மொத்தம் 1534 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. ஏலத்தில், ஆர்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4500 முதல் ரூ.5350 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரையிலும் ஏலம் போனது. பருத்தி ஏல மையத்தில் மொத்தம் ரூ.25.85 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், அன்னூர், மேட்டூர், தஞ்சாவூர், பேராவூரணி, கோபி, நம்பியூர், புளியம்பட்டி, சேவூர், குன்னத்தூர், தர்மபுரி, ஆத்தூர், சத்தியமங்கலம், பென்னாகரம், கிணத்துக்கடவு, கொள்ளேகால் ஆகிய பகுதிகளிலிருந்து  420 பருத்தி விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 28 பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர்.  அவிநாசி வேளாண்மை கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் சரவணக்குமார் கூறியதாவது: இந்த வாரம் மொத்தம் 1534 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. பருத்தி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.

Tags : Cotton auction ,Avinashi ,
× RELATED கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு