மொபட் மோதி மூதாட்டி பலி

திட்டக்குடி, டிச. 12: திட்டக்குடியை அடுத்த ஆவட்டி தெற்கு தெருவை  சேர்ந்தவர் முத்தம்மாள்(80). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்து சாலையை கடக்க முயன்றார்.அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த அதே ஊரை சேர்ந்த பெரியசாமி (72) என்பவர், எதிர்பாராதவிதமாக முத்தம்மாள் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து முத்தம்மாளின் மகன் கொளஞ்சி(52) கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : grandfather ,Mopat Mothi ,
× RELATED தனித்தனி சம்பவத்தில் இளம்பெண், மூதாட்டி, ஊழியர் தற்கொலை