×

வாக்குப்பதிவு மையங்களில் ஆய்வு

அரியலூர், டிச. 12: உள்ளாட்சி தேர்தலையொட்டி அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 168 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதையடுத்து வாக்குபதிவு மையங்களில் கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அதன்படி அரியலூர் வாலாஜாநகரம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்படவுள்ள 5 வாக்குப்பதிவு மையங்கள், வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கவுள்ள 3 வாக்குப்பதிவு மையங்களை ஆய்வு செய்தார். அப்போது வாக்குப்பதிவு மையங்களில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க செல்வதற்கு வசதியாக சாய்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதா, குடிநீர் வசதி, மின் இணைப்பு வசதி உள்ளதா என ஆய்வு செய்தார்.

Tags : Inspection ,polling stations ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...