×

சீரமைக்க கோரிக்கை கூட்டு குடிநீர் திட்ட குறைபாடுகளை நீக்கி குடிநீர் வினியோகம் செய்யாததால் ஆளும் கட்சி வேட்பாளர்கள் கலக்கம்

கரூர்,டிச.12: கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி குடிநீர் விநியோகம் செய்யாததால் ஆளும்கட்சி வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றினை நீராதாரமாக கொண்டு 1440 குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் 14கூட்டுக்குடிநீர் திட்டங்கள், குடிநீர் வாரியம் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதுதவிர 11பேரூராட்சிகள், கரூர், குளித்தலை இரு நகராட்சிகளிலும் காவிரியாற்று நீரை ஆதாரமாக கொண்டு குடிநீர் விநியோகத் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டு குடிநீர் திட்டத்தில் கடைநிலை கிராமங்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்கவில்லை, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

இதனிடையே, கடைநிலை கிராமங்களுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒருநிர்வாக பொறியாளர், 2உதவிநிர்வாக பொறியாளர், 2உதவிபொறியாளர் என 5முதல் 7பேர் கொண்ட குழுக்களை சேர்ந்த 85பொறியாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரூர் மாவட்டம் வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்த இவர்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள 8ஊராட்சி ஒன்றியங்களுக்கும் சென்றனர். மேலும் குடிநீர்வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனரும் கரூர் மாவட்டம் வந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.

Tags : party candidates ,
× RELATED அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி...