பாரதியார் சிலைக்கு சபாநாயகர் மாலை

புதுச்சேரி, டிச. 12: பாரதியார் பிறந்தநாளையொட்டி புதுவையில் உள்ள அவரது திருவுருச் சிலைக்கு சபாநாயகர் மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் மலேசிய சிறுவன் பங்கேற்று கவிதை பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கவர்னர் மாளிகை அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து, முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் மற்றும் எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கும் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

இதேபோல் மலேசியாவில் இருந்து புதுச்சேரிக்கு இலக்கிய சுற்றுலா வந்த 50க்கும் மேற்பட்ட மலேசிய வாழ் தமிழர்களும் பாரதியாரின் சிலைக்கு மரியாதை செய்தனர். அப்போது பாரதியாரின் கவிதைகளை மலேசிய தமிழ் கலந்து பாடிய சிறுவன், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான். இதுதவிர பாஜகவினர் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் தமிழ் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது.

Related Stories:

>