×

கரூர் கூத்தரிசிக்கார தெருவில் கேட்வால்வு உடைப்பால் வீணாகும் குடிதண்ணீர்

கரூர், டிச. 12: கரூர் கூத்தரிசிக்காரத் தெருவில் கேட்வால்வில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதை பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சிக்குட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் இருந்து ஜவஹர் பஜார் செல்லும் சாலையில் கூத்தரிசிக்காரத் தெரு உள்ளது. இந்த சாலையோரம் குடியிருப்புகளும், தனியார் வர்த்தக நிறுவனங்களும், அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ளன. இதில், மேல்நிலைப்பள்ளியின் அருகில், கடந்த சில நாட்களாக கேட்வால்வில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையில் கலந்து வருகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். குடிநீர் தேவையின் அவசியம் கருதி தண்ணீர் வீணாகி வருவதை பார்வையிட்டு உடனடியாக இதனை சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : gateway break ,colonnade street ,Karur ,
× RELATED கலெக்டர் ஆய்வு கொள்ளிடம் கூட்டு...