சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி

காரைக்கால், டிச. 12:  திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் கார்த்திகை தீபதிருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. 3 சிவாச்சாரியார்கள் அகல் தீபம் ஏந்தி ஊர்வலமாக வந்து சிறப்பு பூஜைகள் செய்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. முன்னதாக விநாயகர், முருகன், சிவன், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் சுவாமிகளுக்கும், பூஜிக்கப்பட்ட பெரிய அகல்விளக்குகளுக்கும் சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அகல்விளக்குகளை சிவாச்சாரியார்கள் கையில் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து ஆலய நுழைவாயிலின் எதிரே அமைக்கப்பட்டு இருந்த சொக்கப்பனை முன்பு வந்தனர். சொக்கப்பனைக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்து சொக்கப்பனை தீயூட்டப்பட்டது. கார்த்திகை தீபதிருவிழாவின் சொக்கப்பனை நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா, சீனியர் எஸ்பி மகேஷ்குமார் பர்ன்வால், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ல கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Related Stories:

>