10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

காரைக்கால், டிச. 12: காரைக்கால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி துணை முதல்வர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் அசோகன் முன்னிலை வகித்தார்.  பள்ளி துணை முதல்வர் ராஜசேகரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, உயர்கல்விக்கு செல்லும் வகையில் மாணவ, மாணவிகள் தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும், போட்டித் தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்து விளக்கினார். வழிகாட்டல் பன்முக பயிற்சியாளர் பாபுநேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உயர்கல்வி நிலையங்களின் பட்டியல், உயர்கல்விக்கு தேர்வு செய்யப்படும் முறை, வேலைவாய்ப்புக்கான கல்வி, மாணவர்கள் பள்ளி படிப்பின்போதே தயாராகக்கூடிய முறைகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார். என்எஸ்எஸ் அதிகாரி விஸ்வேஸ்வரமூர்த்தி வரவேற்றார். தமிழாசிரியர் செந்தில்முருகன் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: