தாந்தோணி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுகவினர் உட்பட ஏராளமானோர் வேட்புமனு தாக்கல்

கரூர், டிச. 12: கரூர் தாந்தோணி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று அதிமுகவினர் உட்பட ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மூன்று நாட்களாக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை தாந்தோணி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு சிவசாமி உட்பட ஏராளமானோர் பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.
வேட்பாளர்களுடன் கட்சி நிர்வாகிகளும் ஒன்றிய அலுவலகம் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வினை தொடர்ந்து, தாந்தோணி ஒன்றிய பகுதியில் உள்ள ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி முன்னாள் தலைவரும், அமைச்சரின் தம்பியுமான சேகரின் மனைவி சாந்தி என்பவரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : AIADMK ,office ,Tandoni Union ,
× RELATED எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?