சாலையில் கேபிள் பதிக்க தோண்டிய குழியை மூடாததால் மக்கள் அவதி

கரூர், டிச. 12: சாலையில் குழியை மூடாததால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது, கரூர் சுங்ககேட்டில் இருந்து திருமாநிலையூர் செல்லும் சாலையில் திருமாநிலையூரில் கேபிள் பதிப்பதற்காக குழிதோண்டப்பட்டது. வேலை முடிந்தும் குழியை மூடி முன்பிருந்ததுபோல சாலையை சீரமைக்காமல் சென்றுவிட்டனர். இதனால் கேபிள் வௌியே துருத்திக்கொண்டு நிற்கிறது. குழிமூடப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இது இடையூறாக இருக்கிறது. இரவுநேரத்தில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் வாகனஓட்டிகள் குழியில் மோதிபடி செல்கின்றனர். சாலையை செப்பனிட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : closure ,road ,
× RELATED கடந்த ஆண்டில் சாலை விபத்தில் 253 பேர் மரணம்