தொட்டியபட்டி பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா

க.பரமத்தி, டிச.12: தொட்டியபட்டி தொடக்கப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்கள் அனைவரும் பாரதியாரை போல உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். க.பரமத்தி ஒன்றியம் மொஞ்சனூர் ஊராட்சி தொட்டியபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் மகாகவி பாரதியின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்கள் அனைவரும் பாரதியாரை போல உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமை வகித்து மாணவ மாணவியர்களுக்கு பேச்சு, ஓவியம், கவிதை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். ஊர் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இடைநிலை ஆசிரியை ரேவதி நன்றி கூறினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியை அடுத்த அண்ணாநகரில் பாரதியாரின் 137 வது பிறந்த நாளை முன்னிட்டு, ஒன்றிய இந்து முன்னனி சார்பில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பள்ளபட்டி அண்ணாநகரில் ஒன்றிய இந்து முன்னனி சார்பில்பாரதியாரின் 137 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பாரதியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சிவா உள்ளிட்ட ஒன்றிய இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.

Tags : Bharatiyar ,Birthday ,Thottiyapatti School ,
× RELATED நேதாஜி பிறந்த நாள் விழா