மினி லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்வதை தடுக்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், டிச.12: மினிலாரிகளில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிக பாரம் ஏற்றிசெல்வதை தடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூரு பகுதிகளில மினி லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்கின்றனர். தார்போட்டு உயரமாக கட்டி வைத்துள்ளனர்.இதனால் பின்னால் வரும் வாகனங்கள் தடுமாறுகின்றன. எதிரே வரும வாகனங்கள்தெரியாமல் இந்த வாகனத்தின் பின்னாலேயேநீண்ட து£ரம்செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஓவர்டேக்கும் செய்யமுடியவில்லை. எதிர்திசையில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்குசரக்குகள் உயரமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. போலீசார் வாகனசோதனையின்போது இதுபோன்ற வாகனங்களை சோதனை செய்துஅபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தால்தான் பிற வாகன ஓட்டிகள் நிம்மதியாக செல்ல முடியும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு