மக்களிடையே பணம் பறிக்கும் முயற்சி சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர்,டிச.12: தாந்தோணிமலை ஊர்பொதுமக்கள் மற்றும் கொத்துக்காரர் ராம்குமார், நாட்டாமைக்காரர் செல்வராஜ், பெரியதனம் சண்முகம், நடராஜ் ஆகியோர் தாந்தோணிமலை போலீஸ்நிலையம், மாவட்ட காவல் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு: 1000குடும்பத்தினர் நல்லிணக்கத்துடன் வசிக்கிறோம். கோயில் திருவிழா நடத்த நாடக அரங்கம் அரசால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பங்களிப்புடன் அடிப்படைவசதிகள், மரங்கள் பராமரிக்கப்பட்டுவருகிறது. சமூகவிரோதிகள் இரவுநேரங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனையடுத்து சிலர் சமூகவிரோதிகள் தூண்டுதலின்பேரில், அவதூறு பரப்பி வருகின்றனர். மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்தை குலைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கோயில்களில் பிரச்னை செய்து பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து துணைபோகும் அமைப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags :
× RELATED விபத்தை தடுக்க நடவடிக்கை வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்