×

வேட்பு மனு தாக்கல் ஆவண விபர அறிக்கை நோட்டீஸில் நோட்டரி பப்ளிக் என்பதற்கு பதிலாக ரோட்டரி கிளப் என தவறாக உள்ளது சரி செய்ய மக்கள் எதிர்பார்ப்பு

\கரூர், டிச. 12: கரூர் தாந்தோணி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் அருகே வேட்புமனு தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் விபர அறிக்கையில் நோட்டரி பப்ளிக் என்பதற்கு பதிலாக ரோட்டரி கிளப் என குறிப்பிட்டுள்ளதை சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் உள்ள 8 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. 16ம்தேதி வரை வேட்புமனு தாக்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து ஒன்றியம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்க நுழைவு வாயில் பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் கையுடன் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் குறித்து அறிக்கை ஒட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் தாந்தோணி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வேட்பாளர்களுக்கு தேவையான ஆவணங்கள் குறித்து நோட்டீஸ் வைக்கப்பட்டுள்ளது.

அதில், 1வது காலத்தில் படிவம் 3ஏ (புகைப்படத்துடன் 20 ரூபாய் பத்திரத்தில் ரோட்டரி கிளப் வக்கீல் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ரோட்டரி கிளப் என்ற இடத்தில் நோட்டரி பப்ளிக் எனதான் குறிப்பிட வேண்டும். ஆனால், தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதால் புதிதாக வேட்புமனு தாக்கல் செய்ய நினைக்கும் வேட்பாளர்கள் குழப்பத்தில் இருந்து பின்னர் விசாரித்து சரி செய்து கொண்டனர். எனவே, குறிப்பிட்ட இடத்தில் சரியான முறையில் எழுதி வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : filing ,Notary Public ,Rotary Club ,
× RELATED திருத்தங்கல் இணைக்கப்பட்டதால் பெரு...