×

ஆணையர் எச்சரிக்கை அறிவியல் கண்காட்சியில் மாடித்தோட்டம் அமைத்த சீர்காழி பள்ளிக்கு முதல் பரிசு

சீர்காழி, டிச.12: மயிலாடுதுறையில் 3 மாவட்ட பள்ளிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சியில் சீர்காழி பள்ளி மாணவர்கள் அமைத்திருந்த மாடித்தோட்டத்திற்கு பரிசு வழங்கப்பட்டது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் திருவாரூர், கடலூர் மற்றும் நாகை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் கண்காட்சியில் கலந்து கொண்டன. சீர்காழி சபாநாயக முதலியார் இந்து பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியின் மாடித்தோட்டத்தினைப் பற்றிய திட்ட அறிக்கையுடன் மாடித்தோட்ட பயிர்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். இது அனைவரிடமும் மிகச் சிறந்த வரவேற்பை பெற்றது.
மேலும் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்திலும் சிறந்தது என மாடித்தோட்ட ஆய்வு தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆய்வு குறித்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் புகழேந்தி மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் விளக்கமளித்தனர். அறிவியல் ஆசிரியர் தமிழ்வாணன் வழிகாட்டுதலும் இதற்கு ஊக்கமாக அமைந்தது. பரிசு பெற்ற மாணவர்களை பள்ளி செயலர் ராமகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் தங்கவேலு, பள்ளி முதல்வர் தங்கதுரை ஆகியோர் பாராட்டினர்.

Tags : corridor school ,Commissioner ,Alert Science Fair ,
× RELATED வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து...