×

நாகை நகராட்சியில் சாலையில் திரியும் கால்நடைகள் கோ சாலையில் அடைக்கப்படும்

நாகை, டிச.12: நாகை நகராட்சி எல்லைக்குள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகளை சாலையில் விட்டால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் ஏகராஜ் தெரிவித்துள்ளார்.
நாகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் நகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு கோ சாலையில் ஒப்படைக்கப்படும். கால்நடைகளை வளர்ப்போர் தங்களது பொறுப்பில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். கோ சாலையில் கால்நடைகளை விட்ட பின்னர் அபராதத்துடன் உரிய ஆவணங்களை சமர்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் கால்நடை உரிமையாளர் மீது நீதி மன்றம் மூலம் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : road ,municipality ,Naga ,Koh Road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி