×

கஞ்சா விற்றவர் கைது

நாகை, டிச.12: நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வதரை போலீசார் கைது செய்தனர். நாகை கூட்ஸ் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில் அங்கு சென்ற சப்இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ் மற்றும் போலீசார் அங்கு சந்தேகத்தின்பேரில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்த ஆனந்த் (40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஊடு நடவு
நெல் பயிர் அதிக நாட்கள் நீரில் மூழ்கும் பட்சத்தில் நெல் குருத்து ஈ, இலை சுருட்டுப் புழு, பச்சை தத்துப்பூச்சி, குலைநோய், இலை உறை கருகல் நோய் போன்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கண்டறிந்து தக்க பூச்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இளம் பயிர்களில் தண்ணீர் தேங்கி அழுகிய நிலை ஏற்பட்டிருப்பின் இருப்பில் உள்ள நாற்றுக்களை கொண்டு ஊடு நடவு செய்ய வேண்டும் அல்லது அதிக குத்துக்கள் உள்ள நடவு பயிரினை கலைத்து பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்திட வேண்டும்.

இலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்த பறவைக் குடில் ஏக்கருக்கு 20 வீதம் வைத்து இரட்டை வால் குருவியின் மூலம் இலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்த வேண்டும். பயிர் கரும்பச்சையாக இருக்கும் போது மேலும் யூரியா இடுவதை தவிர்க்க வேண்டும். புகையான் பூச்சியிலிருந்து பயிரை காப்பாற்றிட ரசாயன பூச்சிமருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...