×

இந்திய வர்த்தக தொழிற்குழும தலைவர் தகவல் ஸ்மார்ட் போன்களில் காவலர் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

நாகை, டிச.12: ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பெண்கள் உடனடியாக காவலர் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் என்று காவலர் செயலி அறிமுக விழாவில் எஸ்பி செல்வநாகரத்தினம் கூறினார். நாகை அருகே பாப்பாக்கோயில் ஐசக்நியூட்டன் கல்லூரியில் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான அவசர உதவி செயலியான காவலர் செயலி அறிமுகவிழா நேற்று நடந்தது. கல்லூரி தாளாளர் ஆனந்த் வரவேற்றார். காவலர் செயலியை எஸ்பி செல்வநாகரத்தினம் அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது: இன்றைய நவீன அறிவியல் உலகத்தில் ஸ்மார்ட் செல்போன் முக்கிய அங்கம் வகிக்கின்றது. எனவே எல்லா மாணவிகளும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவீர்கள். நமது நாட்டில் 60 கோடி ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 5 கோடி ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர சாதாரண போன்களும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே தான் பெண்களை பாதுகாக்க காவலர் துறை காவலர் செயலி என்ற புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் பெண்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் ஆகியவற்றை எடுத்து விட்டு முதலில் இந்த காவலர் செயலியை பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும்.

இந்த காவலர் செயலி மூலம் பெண்கள் தனியாக செல்லும்போது தங்களுக்கு ஆபத்து ஏற்பட போவதாக உணர்ந்தால் உடனே தகவல் தெரிவிக்கலாம். நீங்கள் தெரிவிக்கும் இந்த தகவல் சென்னை அலுவலகம் சென்று அங்கிருந்து சம்பந்தப்பட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படும். எஸ்பி அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவித்த இடத்திற்கு அருகில் இருக்கும் ரோந்து போலீசாருக்கு தகவல் அனுப்பி பாதுகாக்கப்படுவீர்கள். இந்த செயல்கள் அனைத்தும் 10 நிமிடங்களில் முடியும். காவலர் செயலி மூலம் தகவல் அனுப்பியவுடன் நீங்கள் எந்த இடத்தில் இருந்து தகவல் அனுப்பினீர்கள் என்பது உட்பட அனைத்தும் சேகரிக்கப்படும். அந்த அளவிற்கு இந்த காவலர் செயலி நவீனமயமாக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : Business Activist ,Indian ,
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்