×

திருவள்ளூர் அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி

திருவள்ளூர், டிச. 12: திருவள்ளூர் அடுத்த மப்பேடு - சுங்குவார்சத்திரம் சாலையில் உள்ளது புதுப்பித்து கிராமம். இங்கு, நெடுஞ்சாலையையொட்டி இந்தியன் வங்கி கிளை உள்ளது. அதனருகே ஏடிஎம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்து, கடப்பாரையால் இயந்திரத்தை உடைக்க முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்தது. இதையடுத்து மர்ம நபர்கள் தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது  இயந்திரம் சேதமானது தெரிந்தது. இதை தொடர்ந்து, ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் ஏடிஎம்மில் பதிவான மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்,

Tags : ATM ,Thiruvallur ,
× RELATED மதுபோதையில் ஏ.டி.எம் இயந்திரத்தை சேதப்படுத்தியவர் கைது