×

உறுதிமொழி பத்திரம் தயாரிக்க நோட்டரி வழக்கறிஞர்களிடம் குவியும் வேட்பாளர்கள்

திருத்தணி, டிச. 12: திருத்தணி ஒன்றியத்தில் ஒரு மாவட்ட கவுன்சிலர், 12 ஒன்றிய கவுன்சிலர், 27 ஊராட்சிமன்ற தலைவர்  மற்றும் 219 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், இதேபோல் திருவலங்காடு ஒன்றியத்தில் ஒரு மாவட்ட கவுன்சிலர், 16 ஒன்றிய கவுன்சிலர், 42 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 297 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகின்ற 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக வேட்பு மனுக்களுடன் சேர்த்து உறுதிமொழி ஆவணத்தை வழங்கவேண்டும். ரூபாய் 20 மதிப்புள்ள முத்திரைதாளில் வேட்பாளர் பெயர் மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்கு விவரம், சொத்து மதிப்புகள், நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட அல்லது விடுவிக்கப்பட்ட வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா, வாகனங்கள் சேமிப்பு போன்ற விவரங்கள்  பதிவு செய்து நோட்டரி வழக்கறிஞர்  கையொப்பமிட்டு, அதை வேட்புமனுக்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் அலுவலர்களிடம் வழங்க வேண்டும். இதற்காக மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம ஊராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு மற்றும் ரூ.20 மதிப்புள்ள  பத்திரங்களை வாங்கிக்கொண்டு, உறுதிமொழி பத்திரங்களை தயாரிக்க திருத்தணியில் உள்ள நோட்டரி வழக்கறிஞர்களை அணுகி வருகின்றனர்.

Tags : notary attorneys ,
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்