×

எஸ்.எஸ்.என் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திருப்போரூர், டிச. 12: திருப்போரூர் எஸ்எஸ்என் கல்லூரி விடுதியில், முதலாண்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவருக்கு ஆங்கிலம் பேச வராததே இந்த சோக சம்பவத்துக்கு காரணமாக இருக்குமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நம்மாழ்வார் நகரை சேர்ந்தவர் ரமேஷ் தங்கதுரை (45). அதே பகுதியில் வேளாண் விதை பொருட்கள் விற்பனை செய்கிறார். இவரது மகன் கிஷோர் (18). கடந்த மே மாதம் சென்னை அருகே திருப்போரூரில் உள்ள சிவ நாடார் பல்கலைக்கழகத்தில் உள்ள எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட பிரிவில் சேர்த்தார்.  மாணவன் கிஷோர் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் தங்கினார். அவருடன் அதே கல்லூரியில் வேறு பிரிவில் படிக்கும் 2 மாணவர்களும் தங்கியுள்ளனர். கடந்த 6ம் தேதி, மற்ற 2 மாணவர்கள் தங்களது ஊருக்கு சென்றனர். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கிஷோரின் சகோதரர் பிரசாந்த், கோவில்பட்டியில் இருந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

ஆனால் கிஷோர் செல்ேபானை எடுக்கவில்லை. இதையடுத்து அவரது நண்பர்களுக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது, மற்றொரு மாணவர் கிஷோரின் அறைக்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரவு 11.30 மணியளவில் விடுதி வார்டன் வந்து கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள ஜன்னலில் டவலால் தூக்குப்போட்டு கிஷோர் சடலமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : college student ,SSN ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை