×

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அதிகாரிகள் வருடாந்திர சோதனை

செங்கல்பட்டு, டிச.12:  செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், ரயில்வே அதிகாரிகள் வருடாந்திர ஆய்வு செய்தனர். சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், பரனூர் ஆகிய ரயில் நிலையங்களை சென்னை கோட்ட ரயில்வே தலைமை பாதுகாப்பு அதிகாரி சித்தார்த் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 40 பேர் கொண்ட அதிகாரிகள் ரயில் பயணிகள் பாதுகாப்பு தண்டவாளங்களை பிரித்து ரயில் வழித்தடங்களை மாற்றக்கூடிய பாய்ன்ட் மற்றும் தண்டவாளங்கள், சிக்னல், ரயில்வே நடைபாதை, ரயில் நிலையத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள பாலம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களை ஆண்டுக்கு ஒருமுறை பார்வையிட்டு, அங்குள்ள பயணிகள் பாதுகாப்பு, சிக்னல் கோளாறு, தண்டவாள பணிகள் உள்பட பல்வேறு பணிகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.அந்த ஆய்வில் குறைபாடுகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டி, உடனடியாக சரி செய்யப்படும். தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இன்று (நேற்று) செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம், மேல்மருவத்தூர், மயிலம், திண்டிவனம் வரை உள்ள ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது“ என்றனர்.

Tags : inspection ,railway station ,Chengalpattu ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!