×

குமரியில் நகை கண்காட்சிக்கு தடைவிதிக்க வேண்டும்

நாகர்கோவில், டிச.12: கன்னியாகுமரி மாவட்ட நகை தொழிலாளர் பாதுகாப்பு பேரவை தலைவர் செலஸ்டின், உப தலைவர் நாகலிங்கம், பொதுசெயலாளர் மீனாட்சிசுந்தரம், முதன்மை செயலர் ரகுபதி, பரமசிவன், அந்தோணி உள்ளிட்டோர் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் நகை தொழில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சிறு வணிகம் முதல் பெரிய வணிகம் வரை தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு பாரம்பரிய நகை தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலையின்றி பிற தொழிலுக்கு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. நகை தொழிலை நம்பியுள்ள நகை கடைகள் மொத்த பட்டறைகளில் 30 சதவீதம் கூட செயல்படவில்லை.

குமரி மாவட்டத்தில் இந்த தொழிலை நம்பியுள்ள 15 ஆயிரம் தொழிலாளர்கள் நிலைமை மோசமாக கூடாது என்பதை கருதி மாவட்டத்தில் நகை கண்காட்சி நடத்தகூடாது என்று மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கடந்த 2005ம் ஆண்டில் தடுத்து நிறுத்தியுள்ளனர். தற்போது மீண்டும் நாகர்கோவிலில் நகை கண்காட்சி நடத்த சில நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எனவே பாரம்பரிய நகை தொழிலை நம்பி வாழுகின்ற எங்கள் வாழ்க்கையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்து நடத்த உள்ள கண்காட்சியை தடை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : exhibition ,Kumari ,
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!