×

கீரிப்பாறையில் அரசு ரப்பர் தோட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச.12 :  குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தின் கீழ் உள்ள ரப்பர் தோட்டங்களில் 342 பேர் ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர். இவர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல், தினமும் ரூ.468 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2000ம் ஆண்டில் இருந்தே, ஒப்பந்த பணியாளர்கள் பணியில் உள்ளனர். இந்த நிலையில் ஒப்பந்த பணியாளர்களுக்கான சம்பளத்தை அரசு ரப்பர் கழக நிர்வாகம், திடீரென ரூ.418 ஆக குறைத்துள்ளது. ஏற்கனவே சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஒப்பந்த ஊழியர்களின் சம்பள குறைப்பு கண்டித்து, கீரிப்பாறையில் உள்ள கோட்ட மேலாளர் அலுவலகம் முன் நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சோனியா, ராகுல் பொது தொழிலாளர்கள் சங்க பொது செயலாளர் குமரன் தலைமை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், ஐஎன்டியுசி அனந்த கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது போல் சம்பளம் வழங்க வேண்டும். சம்பளத்தை குறைத்து வழங்கினால் அடுத்த கட்டமாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர்.

Tags : Government rubber plantation contract workers ,
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...