×

நாகர்கோவில் நாகராஜா கோயில் தைத்திருவிழா கால்கோள் விழா

நாகர்கோவில், டிச.12: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தைத்திருவிழாவிற்கான கால்கோள் விழா நடந்தது. நாகர்கோவில் நாகராஜா கோயிலில் அனந்தகிருஷ்ணசுவாமி கோயில் தைப்பெருந்திருவிழா வரும் ஜனவரி மாதம் 31ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து பிப்ரவரி மாதம் 8ம் தேதி சனிக்கிழமை தைப்பூசம் நட்சத்திரம் அன்று காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. மறுநாள் பிப்ரவரி 9ம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்தன்று மாலையில் 5.30 மணிக்கு திரு ஆராட்டு நடைபெறுகிறது.

இதனையொட்டி நேற்று காலையில் நாகராஜா கோயிலில் தைத்திருவிழா கால்கோள்விழா நடைபெற்றது. நாராயணன் நம்பூதிரி தலைமை வகித்தார். காரியம் ஆறுமுகதரன், கோயில் ஸ்தானிகர் சுப்பிரமணியம், தியாகி முத்துகருப்பன், ராஜன் உட்பட அனந்தகிருஷ்ண பக்த சேவா அறக்கட்டளையினர் கலந்து கொண்டனர்.

Tags : Nagaraja Temple Strip Festival ,Nagercoil ,
× RELATED சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்...