×

இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தகவல் பகுப்பாய்வு துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

சிவகாசி, டிச. 11: சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரியில் உலகலாவிய சர்வதேச கருத்தரங்கம் ‘ஐகான்ரேஸ்-19’ என்ற பெயரில் 3 நாள் நடைபெற்றது. முனைவர் சாந்தா செல்வகுமாரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் அறிவழகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் அறிவியல் தொழில்நுட்ப கழக விஞ்ஞானி டிராம் டிரங்குயூ, சூரத்கல் தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் சந்திரசேகரன், காராக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகம், திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம், சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், அமெரிக்க மேத்ஒர்க்ஸ் கம்பெனி வல்லுனர்கள் பலர் கலந்து கொண்டனர். பல்வேறு நாட்டில் இருந்து 65 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.டிராம் டிரங்குயூ பேசுகையில், ‘எதிர்காலத்தில் பொறியியல் துறைகளிலும் தகவல் பகுப்பாய்வு சார்ந்த துறைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இத்துறையில், ஏராளமான பொறியியல் வல்லுனர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தகவல் சார்ந்த பகுப்பாய்வு எல்லா துறைகளிலும் மிக முக்கிய வகிக்கும்’ என்றார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் செய்திருந்தார்.

Tags : field ,engineering students ,
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது