இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

காரியாபட்டி, டிச. 11: காரியாபட்டி அருகே, சிஇஓஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விருதுநகர் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் சார்பில்  கிராமப்புற இளைஞர்களுக்கு, தொழில் திறமையை மேம்படுத்த இலவசமாக ஆண்களுக்கு 2 மாதம் போட்டோ மற்றும் வீடியோகிராபி பயிற்சியும், பெண்களுக்கு பூங்கொத்து தயாரிக்கும் பயிற்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார். சிஇஓஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். மக்கள் கல்வி நிறுவன திட்ட அலுவலர் கிருஷ்ணசாமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் பயிற்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். இதில் பயிற்றுநர்கள் கவிதாகுமாரி, அருண்குமார் மற்றும்  பயிற்சி பெற இருக்கும் கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சிறப்பு அறிமுக பயிற்சி முகாம் மக்களை...