வீணாகும் வரிப்பணம் கல்லூரி முதல்வருக்கு விருது

சிவகாசி, டிச. 11: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள சோயா பல்கலைக்கழகத்தில், தொழில்நுட்ப கல்விக்கான ‘ஐஎஸ்டிஇ’ தேசிய மாநாடு நடைபெற்றது. இதில், உத்தரப்பிரதேச மாநில அரசின் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வியில் சிறந்த சேவை புரிந்ததற்கான தேசிய விருது, சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நந்தகுமாருக்கு வழங்கப்பட்டது. தொழில் நுட்ப கல்விக்கான அனைத்து இந்திய கவுன்சிலின் தலைவர் சஹஸ்ரபுத்தே மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா ஆகியோர் விருதை முதல்வர் நந்தகுமாருக்கு வழங்கினார். விருது பெற்ற முதல்வரை, கல்லூரி தாளாளர் அசோகன் மற்றும் ஆசிரியர்கள் பராட்டினர்.

Tags : College Principal ,
× RELATED செவிலியர் பிரசவம் பார்த்ததால் பெண்...