×

சாத்தூரில் சாலையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் இடையூறு

சாத்தூர், டிச. 11: சாத்தூரில் பிரதான சாலையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை முறைப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூரில் கோயில்கள், சார்பதிவாளர் அலுவலகம், காவல்நிலையம், பள்ளிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் பிரதான சாலையில் அமைந்துள்ளன. இந்த சாலையில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால், ஆக்கிரமிப்பை அகற்ற, பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

பிரதான சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம், உணவகங்கள், கடைகள், காவல்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வருபவர்கள்  தங்களது டூவீலர்களை நிறுத்த இடமில்லாமல், பிரதான சாலையின் ஓரம் நிறுத்துகின்றனர். மறுபுறம் ஆட்டோக்களை நிறுத்துகின்றனர். இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தினசரி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சாத்தூரில் பொதுமக்கள் நலன்கருதி, சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்த போக்குவரத்து போலீசாரும், சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED தாழ்வான சாலையில் தேங்கும் மழைநீர்