காரியாபட்டி அருகே கற்கள் பெயர்ந்த இணைப்புச்சாலை

காரியாபட்டி, டிச. 11: காரியாபட்டி அருகே, புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் இணைப்பில் சாலையை சீரமைக்காததால், கற்கள் பெயர்ந்து வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். காரியாபட்டி அருகே, கல்குறிச்சியில் செல்லும் மதுரை-அருப்புக்கோட்டை சாலையை, புதிதாக அமைக்கும் பணி நடந்தது. இதில், தனியார் பள்ளி முன்பு வரத்து கால்வாய் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கும்  சாலைக்குமான இணைப்பில் மண்ணை மட்டும் மேவி சீரமைத்துள்ளனர். சமீபத்தில் பெய்த மழையால் மண் அடித்துச் செல்லப்பட்டு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து செல்கின்றனர். எனவே, பாலத்தின் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kariyapatti ,
× RELATED காரியாபட்டியில் தண்ணீர் வசதியில்லாத...