அருப்புக்கோட்டையில் பரபரப்பு தூர்வார பொதுமக்கள் கோரிக்கை கஞ்சா விற்ற 2 பேர் கைது

ராஜபாளையம், டிச. 11:ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய எஸ்.ஐ முத்துக்குமரன் மற்றும் போலீசார், முடங்கியார் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, தென்றல் நகர் விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், ஒருவர் மாலையாபுரத்தை முத்து மகன் முத்துக்குமார் (20) என்பதும், அவர், ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை, அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்த நல்லமுத்து மகன் முத்துக்குமார் (22) என்பவருக்கு விற்றது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பின் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

Tags : Aruppukkottai ,
× RELATED கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது