×

மின்வாரிய களப்பணியாளர் தேர்வு இன்றும் நாளையும் நடக்கிறது

தேனி, டிச.11: தேனியில் நடந்து வரும் மின்வாரியத்தில் காலியாக உள்ள களப்பணியாளர்கள் பணியிடத்தை நிரப்ப பயிற்சியாளர்கள் தேர்வு இன்றும் நாளையும் நடக்கிறது.தமிழ்நாடு முழுவதும் மின்வாரியத் துறையில் காலியாக உள்ள சுமார் 5 ஆயிரம் களப்பணியாளர்கள் பணியிடத்தை நிரப்ப மின்வாரியத் துறை முடிவு செய்தது. இத்தகைய கேங்க் மேன் எனப்படும் களப்பணியாளர் பயிற்சியில் சேர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி பெற்றவர்கள் நிரந்தர களப்பணியாளர்களாக நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.தேனியில் என்.ஆர்.டி ரோட்டில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் தேனி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் உமாதேவி தலைமையில் தேர்வுக்குழுவினரான வேறு மாவட்டங்களை சேர்ந்த மின்வாரிய 1 செயற்பொறியாளர், 10 உதவி செயற்பொறியாளர்கள், 10 உதவி பொறியாளர்கள் கொண்ட குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர்.

இத்தேர்வு டிச.10ம் தேதி வரை நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கடந்த 2ம் தேதி மற்றும் 3ம் தேதிகளில் தேனி மாவட்டத்தில் ஆரஞ்சு அலார்ட் செய்யப்பட்டதையடுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது 10ம் தேதி முடியவேண்டிய தேர்வு இன்றும்(11ம் தேதி) நாளையும் (12ம்தேதி) நடக்க உள்ளது.தேனி மாவட்டத்தில் 1676 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1000 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. தேனிமாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களுடன் ராமநாதபுரத்தை சேர்ந்த 400 விண்ணப்பதாரர்களுக்கும் தேனியில் இன்றும், நாளையும் நேர்காணல் தேர்வு நடக்க உள்ளது.

Tags :
× RELATED ஜெயலலிதா பேசிய இடத்தில் எடப்பாடி நாளை பிரசாரம்