இ ந் த நா ள் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

உத்தமபாளையம், டிச.11: உத்தமபாளையத்தில் உள்ள அப்பாச்சி பிள்ளை தெருவை சேர்ந்த காளிமுத்துவின் மகன் நாகேந்திரன்(22). இவர் தேனியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பாளையம் பிடிஆர் காலனி செங்கல் சூளைக்கு செல்லும் பாதையில் அரிவாள் வெட்டு காயங்களுடன் மயங்கிய நிலையில் நாகேந்திரன் கிடந்தார். இது குறித்து நாகேந்திரனின் குடும்பத்தினருக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாகேந்திரன் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில் வழக்குப்பதிந்த உத்தமபாளையம் போலீசார், நாகேந்திரனை அரிவாளால் வெட்டியவர்கள் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு