×

காளையார்கோவிலில் கழிவுநீர் கால்வாயை காணவில்லை புதர்மண்டி மறைந்துவிட்டது

காளையார்கோவில், டிச.11: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் ரோட்டில் ஓரமாக உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.காளையார்கோவிலை சுற்றியுள்ள 43 பஞ்சாயத்துக்கு தலைமையிடமாக காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. அலுவலகத்திற்கு செல்லும் சிமிண்ட் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் சாலையின் ஓரமாக உள்ள கழிவுநீர் வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் புதர்மண்டி துர்நாற்றம் வீசுகின்றது. அப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கால்நடை மருத்துவமனை, 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் அதிகளவில் நடமாடுகின்றது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பொதுமக்கள் கூறுகையில், அரசு அலுவலகங்கள் அதிகளவில் உள்ள இப்பகுதியை யாரும் கண்டு கொள்வதில்லை. கழிவுநீர் வடிகால் வாய்க்காலை கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்வதில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துற்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகின்றன. இதன் மூலம் தற்போது இப்பகுதிகளில் டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன. முன் உதாரணமாக இருக்க வேண்டிய காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் செல்லும் வழிகளில் இதுபோன்று புதர்மண்டி இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகின்றது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


Tags : Wastewater canal ,
× RELATED காளையார்கோவிலில் விளைநிலங்களை...