×

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, டிச. 11: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிப்பவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. விண்ணப்பம் மற்றும் பல்வேறு விபரங்கள் அறிய கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் http://sivaganga.nic.in என்ற இணையத்தளத்தில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
× RELATED வேலையில்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெறுவது எப்படி?