வாலிபருக்கு டெங்கு காய்ச்சல்? சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்

மானாமதுரை, டிச. 11: மானாமதுரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கு, டெங்கு அறிகுறி காணப்பட்டதால், மானாமதுரை அரசு மருத்துவமனையில் இருந்து, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மானாமதுரை அருகே உள்ள காரக்குடி கிராமத்தை சேர்ந்த வாலிபர் முத்துக்குமார் (19). இவர், திருப்பூரில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அங்கு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தொடர்ந்து காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளது. மேலும், ரத்த அணுக்களும் நாளுக்கு நாள் குறைந்து வந்ததையடுத்து, மானாமதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.Tags : Sivaganga Government Hospital ,
× RELATED ஆரணி அருகே கல்லூரி மாணவன் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு