×

விபத்தில் பலியான ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை, டிச. 11:  ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பெருவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன்(35). இவர் சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தார்.
கடந்த 03.08.2017 அன்று கருணாகரன் டூவீலரில் காளையார்கோவிலுக்கு வந்துவிட்டு மீண்டும் மாலை பெருவாக்கோட்டை திரும்பி சென்று கொண்டிருந்தார். அவர் உழவூரணி அருகே செல்லும்போது அந்த வழியில் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி சிவகங்கையில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி செம்மல், இறந்துபோன கருணாகரன் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடியே 18 ஆயிரத்து 560ஐ நஷ்டஈடாக வழங்க மதுரையில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
Tags : teacher ,
× RELATED விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு...