துறையூரில் கார்த்திகையையொட்டி கோயில் தெப்பக்குளத்தில் மக்கள் தீபமேற்றி வழிபாடு

துறையூர், டிச.11: துறையூரில் ஆத்தூர் சாலையில் உள்ளது நந்திகேஸ்வரர் கோயில். இந்த கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி நேற்று சொக்கப்பனை எரிப்பு நிகழ்ச்சி மற்றும் நந்திகேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான தெப்பகுளத்தில் 8 ஆண்டுகள் கழித்து தெப்பக்குளத்திற்கு சமீபத்தில் பெய்த மழையால் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் முழு கொள்ளவை எட்டியதை அடுத்து தெப்பக்குளம் முழுவதும் அகல் விளக்கு ஏற்றப்பட்டு பொதுமக்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். தொடர்ந்து அகல் விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தெப்பக்குளத்தில் 3,440 அகல் விளக்கேற்றி வழிபட்டனர். சிலர் குடும்பத்துடன் கலந்துகொண்டு தரிசனம் பெற்றுச்சென்றனர். இந்த நிகழ்ச்சியை துறையூர் ஐயப்பா சேவா சங்கத்தினர், கிரிவல கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பெருமாள்மலை காரிய கமிட்டியினர் ஏற்பாடு செய்தனர்.

Related Stories:

>