சாலை விபத்தில் உயிரை காப்பாற்றியவர்களுக்கு எஸ்.பி., பாராட்டு

திருச்சி, டிச.11: சாலை விபத்தில் உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு எஸ்.பி., பாராட்டு தெரிவித்தார்.திருச்சி எஸ்பி., அலு வலகத்தில் நேற்று மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை உடனடியாக முதலுதவி செய்து மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்றிய 15 நபர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் விபத்தில் சிக்கிய நபர்களுக்கு உதவி செய்த காவலர்களுக்கும், மணல் திருட்டில் விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து மணல் திருட்டை தடுத்தமைக்காகவும், திருட்டு வழக்கில் திறம்பட செயல்பட்டு களவு போன பொருட்களை மீட்டமைக்காகவும், கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் எதிரியை கைது செய்ததற்காகவும், மேலும் பல்வேறு வழக்குகளில் திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக திருச்சி எஸ்.பி., ஜியாவுல் ஹக், பாராட்டு சான்றிதழ் மற்றும் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories:

>