8 ஆண்டுக்குப் பின் நடக்கிறது 14 ஊராட்சி ஒன்றியங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

திருச்சி, டிச.11: பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.திருச்சி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 2011 மற்றும் 2016 ம் ஆண்டுகளில் கண்டறியப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய கூட்டம் நடத்தினர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி வழங்கிட பயிற்சி மையங்கள் தேர்வு செய்திடவும் பயிற்சி அளிக்கப்பட்டது. 14 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் மையங்களின் விவரங்களை வரைப்படத்துடன் உடனடியாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. தேர்தலில் 10 முதல் 15 வாக்கு மையங்களை உள்ளடக்கி மண்டலங்கள் உருவாக்கவும் மண்டலங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்களின் பட்டியலை தயாரிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு மையங்களுக்கு தேவைப்படும் வாக்குப்பதிவுக்கான பொருள்களை உரிய எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு வாங்கி கொள்ளவும் ஏற்கனவே இருப்பில் உள்ள பொருள்களை சமர்பித்து தேவைக்கு ஏற்ப வாக்குப்பதிவு பொருள்களையும் வாங்கி கொள்ளலாம்.

Advertising
Advertising

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மோகனசுந்தரம், நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) சரவணன் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: