×

மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

சாயல்குடி, டிச. 11: முதுகுளத்தூர் அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். முதுகுளத்தூர் அருகே ஆனைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் மகன் மகேந்திரன்(36). மின்வாரிய கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலையில் செல்வநாயகபுரம் கிராமத்திலுள்ள மின் கம்பத்தில் ஏறி மின் வயர் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் மகேந்திரன் மின்கம்பத்திலேயே தலைகீழாக தொங்கியவாறு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Tags : death ,
× RELATED மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி