×

தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் இன்று கந்தூரி விழா

தொண்டி, டிச. 11: தொண்டி அருகே உள்ள நம்புதாளை மகான் பல்லாக்கு ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா இன்று நடைபெறுகிறது. தொண்டி அருகே உள்ள நம்புதாளை மகான் பல்லாக்கு ஒலயுல்லா தர்காவில் 96வது கந்தூரி விழா இன்று புதன் கிழமை நடைபெறுகிறது. கடந்த காலங்களில் நம்புதாளை முழுவதும் காலரா நோய் தாக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அப்போது இப்பகுதிக்கு வருகை தந்த மகான் பல்லாக்கு ஒலியுல்லா இப்பகுதி மக்களின் நோய்களை தீர்க்கும் வகையில் இறைவனிடம் வேண்டி பாடல் பாடினார். அன்று முதல் இன்று வரையிலும் காலரா நோய் இப்பகுதியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இவ்வூரில் வசிக்கும் அனைத்து குடிகளும் வரி செலுத்த வேண்டும். அனைவரும் ஒன்றாக சேர்ந்து உணவு உண்ண வேண்டும் என்றார்.

இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் கந்தூரி விழாவின் போது ஊரில் உள்ள அனைவருக்கும் சந்தா என்னும் நேர்சை வழங்கப்படும். அனைத்து வீடுகளிலும் தங்களால் முடிந்த வரியை செலுத்தி வருகின்றனர். இன்று கந்தூரி விழா நடைபெறுவதையடுத்து நேற்று முன்தினம் மாலை கொடி ஏற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்கீர் மஸ்தான் தர்காவிலிருந்து கொடி ஊர்வலம்  கிழக்கு கடறகரை சாலையில் நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.

Tags : ceremony ,Nampudhavadal ,Thondi ,
× RELATED நீதிமன்றத்தில் பொங்கல் விழா